search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள வீரர் தற்கொலை"

    டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு அரங்க விடுதியில் தங்கியிருந்த இளம் தடகள வீரர் தற்கொலை செய்தது சக வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #ParvinderChaudhary
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அலிகர் நகரைச் சேர்ந்தவர் பர்வீந்தர் சவுத்ரி (வயது 18). தேசிய தடகள வீரரான இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தார்.

    இந்நிலையில் பர்வீந்தர் சவுத்ரி நேற்று மாலை தனது விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அவரது சகோதரியின் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் ஸ்வான் சிங் சாப்ரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணைக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுபற்றி இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை இயக்குனர் நீலம் கபூர் கூறியதாவது:-

    குடும்பத்தின் பணப் பிரச்சினை காரணமாக பர்வீந்தர் சவுத்ரி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று காலை தன் தந்தையுடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார். அதன்பின்னர் மாலையில் அவரது சகோதரி விடுதிக்கு வந்து அவரை சந்தித்துள்ளார்.

    அப்போது தற்கொலை செய்யப்போவதாக சகோதரியிடம் கூறிவிட்டு திடீரென மின்விசிறியில் தூக்கு மாட்டியுள்ளார். சகோதரி வெளியே வந்து கூச்சலிடவும், ஊழியர்கள் உள்ளே சென்று தூக்கில் தொங்கிய பர்வீந்தர் சவுத்ரியை மீட்டு மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். ஆனால் அவர் உயிர்பிழைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விளையாட்டு வீரர் தற்கொலை செய்தது பற்றி கேள்விப்பட்ட விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். #ParvinderChaudhary
    ×